Monday, December 31, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

வழக்கம் போல் புதியதை நம்பி
பழையதை பழிக்க ஆரம்பிக்கும் மனது..

அலை நீரில் தடம் தொலைக்கும் கால் சுவடு போல்
நினைவலைகளில் பலவற்றைத் தொலைக்கத் துடிக்கும் மனது..

ஏன் எத‌ற்கு என எண்ணாமல் என்றோ செய்தவைகளுக்கு
காரணம் எண்ணி அடங்கும் மனது..

கடைசி நிமிடம் வரை நினைவுகளுக்குள் எதையோ தேடி
பெருமூச்சு விட்டு புது மூச்சு வாங்கும் மனது..

எப்போதும் இழப்புக்கு வருந்தும் மனது
இன்று மட்டும் குதுகலிக்கிறது அதிசயமாய்..

புது மழையின் மண்வாசம் போல்
புத்தாண்டு வாசம்  மனமெங்கும்..

பொங்கும் மகிழ்ச்சியும், கனவுகளும்
என்றும் நிலைத்திட

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

No comments: