Tuesday, July 24, 2007

வேட்பாளன்

வாக்காளர் பெருமக்களே!
நான் உங்கள் வேட்பாளன்
நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால்
ஜாதியை ஒழிப்பேன்!
வீதிகளில் உள்ள ஜாதிகளின்
பெயர்களை அழிப்பேன்!
ஜாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தையே
அகராதியிலிருந்து கிழிப்பேன்! - ஆக‌வே
உங்க‌ள் வாக்குக‌ளை என‌க்கே அளியுங்க‌ள்
நினைவிருக்க‌ட்டும் நான்
உங்க‌ள் ஜாதிக்கார‌ன்!
-படித்ததில் ரசித்தது.

No comments: