Tuesday, January 16, 2007

புத்தாண்டு

நேற்று வரை செய்யாததை
நாளை முதல் செய்ய நினைக்கும் மனது..

இன்று வரை கனவு கண்டதை
நாளை முதல் நனவவாக்கிட துடிக்கும் மனது..

நேற்றுக‌ளை ம‌ற‌ந்து விட்டேன்
நாளை முத‌ல் நான் புதிய‌வ‌ன்..

அத்தனையும் முடியுமா?

இது கடந்த முறை போல் இல்லை
இந்த முறை நிச்சயம்..

ச‌ந்தேக‌ம் துடைத்து ச‌த்த‌மில்லாம‌ல்
புத்தாண்டை கொண்டாட காத்திருக்கும் ம‌ன‌து..

க‌ட‌ந்த‌ முறை க‌ட‌ந்து சென்ற‌வை
கை வந்திடவும்
கனவுகளும் நம்பிக்கைகளும்
நம் வாழ்வில் ஒளி சேர்க்க 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!

No comments: