Tuesday, January 16, 2007

க‌ண்ணீர் பூக்கள்..

தாய்மையின் கதகதப்பில் துயில வேண்டியவர்கள்
உந்தன் தகதக ஜூவாலையில்!
பொட்டு வைத்து மை தீட்டி அழகு பார்த்த முகங்களை
உந்தன் பொறாமைத் தீயால் க‌ருக்கி விட்டாயே!

பெயரிலேயே பூ வைத்துக் கொண்டு
மொட்டுக்களைப் பொசுக்கி விட்டாயே!
தளிர் கரங்களால் கண்களில் ஒற்றி
தீபாராதனை புரிந்தவர்களை
(நெருப்)பூ குளிக்க செய்து விட்டாயே!

தாலாட்டுகளி ன்ரீங்காரம் ஓயுமுன்
ஒப்பாரிகளின் ஓங்காரம்!

கள்ளிச் செடிகளை விட்டுவிட்டு
மலர்களை மாய்த்தது ஏனோ?
குள்ள நரிகளை விட்டுவிட்டு
இளங்கன்றுகளை வேட்டையாடியது ஏனோ?

பன்னீர் புக்ஷ்பங்களுக்கு எங்கள்
கண்ணீர் புக்ஷ்பங்களை காணிக்கையாக்குகிறோம்!

குறிப்பு: கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதப்பட்டது.

No comments: